உள்நாடு

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

(UTV|கேகாலை ) – அரநாயக்க பொலிஸ் நிலையத்தின் மூன்று உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 80 மதுபான போத்தல்களுக்கு பதிலாக 25 மதுபான போத்தல்களுடன் மற்றுமொருவரை சந்தேகநபராக பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் கேகாலை பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அளுத்கமவில் மூன்று மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

editor

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்…!!