சூடான செய்திகள் 1

பொலிஸ் சி.சி.டி.வி. கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

(UTVNEWS|COLOMBO) – கொழும்பை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் சி.சி.டி.வி. கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி, வாகன இலக்க தகடுகளை தெளிவாக அறிந்து கொள்ளுதல், வாகன சாரதிகளின் முகங்களின் தெளிவான காட்சிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இது மேம்படுத்தப்படவுள்ளது.

103 கமராக்கள் கொழும்பு நகரில் பயன்படுத்தப்படுவதுடன், இந்த கட்டமைப்பு அனலொக் தொழில்நுட்பத்தின் ஊடாக செயல்படுத்தப்படுகின்றது.

இதனை டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு

163 தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

களுத்துறையில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு