உள்நாடு

பொலிஸ் அதிகாரியை தண்ணீர் போத்தலால் தாக்கிய சம்பவம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள வீதியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை தண்ணீர் போத்தலால் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கடந்த 26 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அருகிலுள்ள வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) சந்தேக நபரை செப்டம்பர் 8 மாதம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) களுத்துறை நகரில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாகொடையைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகரசபை உறுப்பினர் தனுக ஹெட்டியாராச்சி என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

கரையை கடக்கும் புயல் – விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

எரிபொருளை பெற்றுக் கொள்ள இலக்கத் தகடுகளை மாற்றினால் சிறை