பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்காக புதிய சிகை அலங்கார நிலையம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழா நேற்றைய தினம் பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது.
இலங்கை பொலிஸ் சேவை வனிதையர் பிரிவினால் இந்த புதிய சிகை அலங்கார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் தங்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் இலகுவான நேரத்தில், குறைந்த விலையில் தங்களது முடிகளை வெட்டவும் அலங்காரங்களை மேற்கொள்ளுவதற்காகவும் இந்த புதிய சிகை அலங்கார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சிகை அலங்கார நிலையம் இரவு பகல் பாராது பொலிஸ் அதிகாரிகளுக்காக தினமும் சேவையில் இருக்கும் என பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.