உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|கொழும்பு )- பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் இரத்து செய்யப்பட்ட விடுமுறை எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மற்றும் நாளாந்த ஓய்வு இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை பிரதமரிடம் [UPDATE]

ஜனாதிபதியின் மற்றுமொரு திட்டம்

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு