உள்நாடு

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு

(UTV|ஹம்பாந்தோட்டை )- ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பொலிஸ் ஆணையை மீறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ள சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் அருகில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பிக்கு அக்குனுகொலபெலெஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts

கனடாவில் இனப்படுகொலை நினைவுச்சின்னம் – இலங்கை கண்டனம்

editor

ஹட்டன் மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிப்பு