உள்நாடுபிராந்தியம்

பொலிஸார் வராமல் வைத்தியசாலைக்குச் செல்லமாட்டேன் என அடம்பிடித்த நபர்!

தாக்குதலுக்குள்ளான நபரொருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (21) காலை வேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட தகறாறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில், தாக்குதலுக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லு பலரும் முயற்சித்த போது படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகை தந்தால் மாத்திரம்தான் வைத்தியசாலைக்குச் செல்வேன் என அடம்பிடித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸார் காயப்பட்ட நபரை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு

“அரிசியல் சூதாட்டம் சூடுபிடிக்கிறது”

இந்த வார இறுதியில் மின்வெட்டு இல்லை