உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – தப்பியோடிய மூவரை கைது செய்வதற்கு விசாரணை

காலி, தெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடங்கொட பகுதியில், கிங் கங்கைக்கு அருகில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தப்பியோடிய மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (15) பொலிஸார் குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது, வீட்டில் நான்கு பேர் இருந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், ஒருவர் கத்தியை எடுத்து பொலிஸ் அதிகாரிகளை தாக்க முயற்சித்தபோது, அவரது முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மற்ற மூவரும் தப்பியோடியுள்ளனர்.

முன்னதாகவும் இந்த வீட்டில் சட்டவிரோத மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், அதற்கு எதிராக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

எவ்வாறாயினும், நேற்று மாலை 5:30 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனையடுத்து, 119 பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு தவறான தகவலை வழங்கப்பட்டதாக என்பது குறித்தும், தகவல் வழங்கிய நபர் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள தெலிகட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபரும், சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபருக்கு எதிராக பத்தேகம நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள பல குற்ற வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

X-Press Pearl சிதைவுகள் அகற்றும் பணிகள் மே மாதம் நிறைவுக்கு

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.