உள்நாடு

பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு முடக்கப்படாது

(UTV | கொழும்பு) –  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய வைரஸ் பரவிக்கொண்டு வருகின்ற நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, “நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு, நாட்டை முடக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்காக, சுகாதார வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்

உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு!

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது