உள்நாடு

பொருளாதார நிலைப்பாடு குறித்து பிரதமர் இன்று விசேட உரை

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசேட உரையொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ளார்.

இந்நிலையில், அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும், ஆசிய அபிவிருத்தி வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், நேற்று அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கும், இந்த விடயம் தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு

இராணுவ வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்தும் ஆதரவு

editor

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்