சூடான செய்திகள் 1

பொரள்ளை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து

(UTV|COLOMBO) இன்று அதிகாலை 02.30 மணியளவில் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னானவத்தை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன் 141வது பிரிவில் தற்காலிக 04 வீடுகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீயினால் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், தீயிற்கான காரணம இதுவரை கண்டறியப்படவில்லை.

பொரள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

மழையுடனான வானிலை மேலும் அதிகரிப்பு

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்