உள்நாடு

பொரளை – புறக்கோட்டை வரை பேரூந்து முன்னுரிமை வீதி இன்று முதல் அமுல்

(UTV|கொழும்பு) – பொரளை முதல் புறக்கோட்டை வரை இன்று முதல் பேரூந்து முன்னுரிமை வீதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொரளை, புஞ்சி பொரளை, மருதானை, டெக்னிக்கல் சந்தி மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இன்று முதல் பேரூந்து முன்னுரிமை வீதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் பேரூந்து முன்னுரிமை வீதி அமுலில் இருக்கும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க கப்புகொட தெரிவித்தார்.

இதேவேளை, காலி வீதியில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கு வீதிச் சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக இன்று முதல் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

Related posts

சீனியின் விலையில் மாற்றம்!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

மக்களை வாழ வைப்பது எமது கடமையாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor