உள்நாடுபிராந்தியம்

பொரளையில் தாழிறங்கிய வீதி – போக்குவரத்து பாதிப்பு – பொலிஸாரின் விசேட அறிவிப்பு

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மாற்று வழிகள்,

மொடல் ஃபார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழையலாம்.

ராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கோட்டா வீதி வழியாக கொழும்புக்குள் நுழையலாம்.

கொழும்பிலிருந்து மொடல் ஃபார்ம் சந்தி வழியாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இடதுபுறம் திரும்பி, பொரளை சந்தி வழியாக கோட்டா வீதி ஊடாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதிக்குள் நுழையலாம்.

Related posts

பாடசாலைகள் தொடர்பில் ஞாயிறன்று தீர்மானம்

தொற்றில் இருந்து மேலும் 32 பேர் மீண்டனர்

தேசியப் பட்டியல் உறுப்பினராக என்னை நியமித்ததற்கு 99 வீதமானவர்கள் ஆதரவு – ரவி கருணாநாயக்க

editor