அரசியல்உள்நாடு

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.நஸீலின் ஏற்பாட்டில் அபிவிருத்தி குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் நேற்று (17) பொத்துவில் பிரதேச செயலக  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், கே.கோடீஸ்வரன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், பிரதித் தவிசாளர் ஏ.மாபிர், முன்னாள் தவிசாளர் எம்.எச்.ரஹீம், முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பி.பதுர்கான், உதவி பிரதேச செயலாளர் எம்.ராமக்குட்டி, கணக்காளர் எஸ்.எம். ஹாறூன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எ. எம். முகம்மட் சப்ரி ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

IMF முன்மொழி பற்றி பிரதிநிதிகளுடன் கலந்துரையாட பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்