போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (05) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றில் அவர்கள் சோதனையை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் மேற்கொண்டனர்.
இதன்போது போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரும் மீட்கப்பட்ட மதுபான வகைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்த பொலிஸார் ஒரு லட்சம் ரூபா மதிப்புள்ள மதுபான வகைகளை பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
-பாறுக் ஷிஹான்
