உள்நாடுசூடான செய்திகள் 1

பொது மக்கள் நன்கொடை – வீடுகளுக்கு சென்று வழங்கும் நடவடிக்கை நாளை முதல்

(UTV|COLOMBO) – கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் நன்கொடையை பெறும் மக்களுக்கான மார்ச் மாத கொடுப்பனவை வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சமூக சேவை நாளை (08) முதல் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த சேவை முன்னெடுக்கப்படும் என மாநகர ஆணையாளர் சம்பிகா ரோஹினி திசாநாயக்க தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 12,970 குறைந்த வருமானம் மற்றும் வறிய குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

உபேக்ஷா சுவர்ணமாலி கைது

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு!