உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து விலகல்

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் இருந்து இன்று முதல் உடன் அமுலாகும் வகையில், விலகுவதற்கு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தடுப்பூசி வழங்குவதற்கான மத்திய நிலையங்களின் எண்ணிக்கையை இன்று முதல் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமிந்த சமர திவாகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில், 200 – 225 மத்திய நிலையங்களின் மூலமாக கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம், சுகாதார அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாக, 70 – 80 மத்திய நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் ( PHI) பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசென்று, தலைவர்களுக்கு அறியப்படுத்தி, அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தி, இடங்களை தெரிவுசெய்து அனைத்து நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டிந்த நிலையில், மத்திய நிலையங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினால், அவர்களுக்கு பதிலளிக்க முடியாத நிலை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – நால்வர் படுகாயம்

editor

பூஸா சிறையில் கொல்லப்பட்டவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை!

editor

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – 02 வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கையளிக்குமாறு கோரிக்கை