உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருட்டுச் சம்பவங்கள் பெரும் பாலும் வீட்டு உரிமையாளர்கள் ரமழான் மாதத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு, ஆடை கடைகளுக்கு,இரவு வேளையில் இடம்பெறும் தராவீஹ் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் செல்லுவதனால் மற்றும் வேறு தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள் இச்சந்தர்ப்பத்தில் மிகவும் அவதானமாகவும், விழிப்புடணும் செயற்படுதல் அவசியமாகும். சந்தேகத்திற்குரிய வகையில் (குறிப்பாக இரவு வேளையில்) நடமாடுகின்றவர்கள் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறு சம்மாந்துறை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

இதேவேளை, வீட்டு ஜன்னல்களை உடைக்கும் குழுவினர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு