உள்நாடு

பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரி மீது விசாரணை

(UTV | கொழும்பு) – குருநாகல் யக்கஹாபிட்டிய லங்கா ஐஓசி பெட்ரோல் நிலையத்தில் நேற்று (03) பிற்பகல் இராணுவ அதிகாரியொருவர் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கூட்டுத்தாபனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை வெளியாட்கள் குழுவொன்று முறைகேடான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் குறித்த நபரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைத்து வந்த போது, ​​இராணுவ அதிகாரியால் குறித்த பொதுமகன் தாக்கப்பட்டதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டுத்தாபன மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடமைக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக தொடர்ச்சியாக நடந்துகொண்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.

Related posts

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP

உருமாறிய கொவிட் : பயணக் கட்டுப்பாடுகளில் பரிசீலனை

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு – பிரதமர் ஹரிணி

editor