உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

(UTV|கொழும்பு) – இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று(05) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.

இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

பொறாமைத்தன அரசியல் கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும் – சஜித்

editor

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது