உள்நாடு

பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இன்று(30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினமும் தபால் மூல வாக்கு சீட்டுகள் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த முறை தபால் மூல வாக்களிப்பிற்காக 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 14,15,16,17 மற்றும் 20,21 ஆம் ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

ஸுஹைல் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை – 9 மாதங்களின் பின்னர் நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்ட தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

editor

அரசாங்கத்தை சந்தித்த IMF உயர்மட்ட பிரதிநிதிகள்

editor