உலகம்

பொதுக் கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

(UTV | இந்தியா) – பொதுக் கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வெயில் வெப்பம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து 13 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நவி மும்பையில் மாநிலத்தின் பிரபல சமூக ஆர்வலர்களுக்கு மாநில அரசு சார்பில் பூஷண் விருது வழங்கும் விழா நடந்தது.

மகாராஷ்டிராவில் பொதுக்கூட்டத்தில் வெயிலால் 13 பேர் உயிரிழப்பு

இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். திறந்த வெளி மைதானத்தில் இந்த விழா நடந்தது.

இதன்போது, வெயில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் மயங்கினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 120 பேர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிப்புக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யெமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

editor

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!