உள்நாடு

பைஸர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

(UTV | கொழும்பு) – பைஸர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு நாட்டில் அவசர பயன்பாட்டிற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய ஒளடத ஒழுங்குமுறை அதிகார சபையின் ஆலோசனை குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 50 இலட்சம் பைஸர் பயோஎன்டெக் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பைஸர் பயோஎன்டெக் நாட்டில் அவசர தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்ற மூன்றாவது தடுப்பூசியாகும்.

இதேவேளை, கொவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை பாவனைக்கு உட்படுத்துவதற்கும் முன்னதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள்

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!