உள்நாடு

பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம்

(UTV | கொழும்பு) –  கொவிட்-19 ஒழிப்பு திட்டத்தின் கீழ் பைசர் தடுப்பூசியை நிர்வகிக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் உள்பட பல பகுதிகளில் பல்வேறு முறைகேடுகள் பற்றிய செய்திகள் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, இனிமேல், ஃபைசர் தடுப்பூசி இராணுவத்தின் தலைமையில் வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

சரியான நடைமுறைக்கு வெளியே தடுப்பூசி பெற தகுதியற்ற எந்தவொரு நபருக்கும் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்று அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

விபத்தில் சிக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு

editor

உள்ளுராட்சித் தேர்தல் முறைமை : மீள் பரிசீலனை செய்ய மூவர் அடங்கிய குழு