உள்நாடு

பைசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகை இலங்கை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பைசர் தடுப்பூசியின் 70,200 தடுப்பூசி ​டோஸ்கள் இன்று (19) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளன.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விஷேட குளிரூட்டலின் அடிப்படையில் குறித்த தடுப்பூசிகள் கொழும்பு மத்திய சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ஆடைகள் வழங்கி உதவி!

ரணிலுக்கு பிரித்தானியாவில் அமைச்சரவை அமைச்சர் பதவி

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு