உள்நாடு

பேஸ்புக்கில் வெள்ளைக் கொடி – உயிரை மாய்ந்த நபர்

(UTV | கொழும்பு) –

அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் நேற்று காலை உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளைக் கொடியின் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இது குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் விசாரித்த போது வீட்டின் முன்புறம் உள்ள கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

பின்னர் இது தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்திற்கு உறவினர்கள் அறிவித்துள்ளனர். சடலம் கலென்பிந்துனுவெவ, யகல்ல பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

62 ஆண்டில், மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம் : உங்கள் மாணவர்களையும் இனைந்துக்கொள்ளலாம்

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor