உள்நாடு

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

(UTV | கொழும்பு) – கடந்த சில வாரங்களில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்கள், தமக்கு அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் நிலையங்களுக்கு சென்று தம்மை பரிசோதித்துக் கொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் நேற்று(20) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 5 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி நாளை மறுதினம் திறக்கப்படமாட்டாது

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு