உள்நாடு

பேரூந்து சங்கங்கள் சிவப்பு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தனியார் பேரூந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், எதிர்வரும் 18ம் திகதி நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தனியார் பேரூந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளபோதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என, அகில இலங்கை தனியார் பேரூந்து சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, 15 திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்காவிடின் 18ம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை!

editor

நாடு முழுவதும் கனமழை – நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

editor

இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்