உள்நாடு

பேரூந்து கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கட்டண அதிகரிப்புக்கு அமைய, பேரூந்து கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அதன்படி, ஆகக்குறைந்த பேரூந்து கட்டணம் 17 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரித்துள்ளன.

எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் பேரூந்து பயண கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைத்தன.

இதனையடுத்து, போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், பேரூந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானம்

editor

சஹ்ரான் ஹஷீமின் மனைவி ஆணைக்குழு முன்னிலையில்

சிசுக்களை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடி அம்பலம்!