உலகம்

பேருந்துடன் அதிவேக ரயில் மோதி விபத்து – 30 பேர் பலி

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தானில் ரயில் கடவை அற்ற தண்டாவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த ‘பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ்’ ரயில் பேருந்து மீது மோதிய வேகத்தில் ரயிலின் முன்புறம் சிக்கிக்கொண்ட பேருந்து தண்டவாளத்தில் 200 மீட்டர்கள் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு பின்னர் தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருபவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related posts

டிக் டாக் மிரட்டலில் அடங்கியது அமெரிக்கா

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு அபராதம்

பாராளுமன்றத்தில் பரபரப்பு!