உள்நாடுசூடான செய்திகள் 1

பேருவளையில் 11 கொரோனா நோயாளிகள் அடையாளம்

(UTV | கொவிட்–19) – கொரோனா தொற்றாளர்களாக இன்று (22) இனங்காணப்பட்ட 11 பேரும் பேருவளை பிரதேசத்தில் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் களுத்துறை மாவட்டம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 321ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகி இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்.

editor

தமிழர்களின் உணர்வெழுச்சிய அடக்க முடியாது – சாணக்கியன்

கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து