உள்நாடுபிராந்தியம்

பேருந்து கவிழ்ந்து விபத்து – நான்கு பேர் காயம்

இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து கவிழ்ந்ததாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் பேருந்தும் சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வளிமண்டலத் தளம்பல்நிலை நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டலஸுக்கு ஆதரவு