உள்நாடுபிராந்தியம்

பேருந்துடன் லொறி மோதி விபத்து – மூன்று பேர் காயம்

A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் அவர்கள் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

Related posts

மேலும் ஒரு தொகை ஃபைசர் நாட்டை வந்தடைந்தது

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

தேசிய சபை மீதான விவாதம் இன்று