உள்நாடு

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை 🇱🇰!

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

களனிவெளி ரயில் போக்குவரத்தில் தாமதம்