உலகம்

பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்ட த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார்.

பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது முதல் பிரசாரப் பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று (13) காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை இலட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்றநிலையில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விஜய் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்றுள்ளது.

குறித்த பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளதாவது,

எல்லோருக்கும் வணக்கம். அந்த காலத்தில் போருக்கு போகும் முன்பு, போரில் ஜெயிப்பதற்காக, குலதெய்வம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு தான் போருக்கு போவார்கள்.

அந்த மாதிரி அடுத்த வருடம் நடக்க போகும் ஜனநாயக போருக்கு தயாராகும் முன்பு, நம் மக்களை, உங்க எல்லாரையும் பார்த்துட்டு போகலாம் என்று வந்து இருக்கிறேன்.

ஒரு சில மண்ணை தொட்டால் ரொம்ப நல்லது. சில நல்ல காரியங்களை இந்த இடத்தில் இருந்து தொடங்கினால் ரொம்ப நல்லது என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம், அந்த மாதிரி திருச்சியில் தொடங்கினால் எல்லாமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள்.

அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. 1956ம் ஆண்டு அண்ணாதுரை முதலில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்த இடம் திருச்சி தான்.

அதற்கு பிறகு, 1974ம் எம்ஜிஆர் முதல் மாநில மாநாட்டை நடத்தியது திருச்சியில் தான். திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது. மலைக்கோட்டை இருக்கிற இடம், கல்விக்கு பெயர் போன இடம், மதச்சார்பின்மைக்கும், நல்லிணகத்திற்கும் பெயர் பெற்ற இடம், கொள்ளை உள்ள மண் இது.

அதுமட்டுமல்ல இன்றைக்கு உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது, மனசுக்குள் பரவசம், எமோஷனல் வருகிறது. காஸ் சிலிண்டருக்கு மானியம் தரேன்னு சொன்னீங்களே செஞ்சீங்களா?

டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்போம் என்றீர்களே செஞ்சீங்களா? கல்விக்கடனை இரத்து செய்வோம் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத்தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

இலவசமாக பேருந்தை விட்டு விட்டு ஓசியில் போகிறார்கள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். இப்படி எல்லாம் அசிங்கப்படுத்துவதற்கு செய்யாமல் இருக்க வேண்டியது தானே? வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா.

மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாக அமையும் என்று சொல்வார்கள். திருச்சிக்கென்று சிறப்பு வரலாறு உள்ளது. டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக் கடன் இரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப் பணியில் 2 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நாம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

திமுக-வை சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் சிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள்.

எல்லோருக்கும் 1,000 ரூபாய் தருவதில்லை, கொடுத்த சிலருக்கும் சொல்லிக்காட்டுகிறார்கள், அசிங்கப்படுத்துகிறார்கள். உதவி செய்துவிட்டு சொல்லி காட்டுவதற்கு, உதவி செய்யாமலேயே இருந்திருக்கலாம்.

மின்சாரம், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில், சட்ட பிரச்சினைகளில் No Compromise. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் என்ன ஆனது? வரப்போகும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போடுவீர்களா? அரசு உதவியை செய்துவிட்டு, மக்களை கொச்சைப்படுத்துகிறது. மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு? திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? சொன்னீர்களே, செய்தீர்களா?” என்று விஜய் பேசினார்.

பின்னர், உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டும், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.

விஜய் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மைக் வேலை செய்யவில்லை. ஸ்பீக்கர்களும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அவர் பேச்சு தொலைக்காட்சி நேரலைகளில் சரிவர கேட்கவில்லை.

மேலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

Related posts

அவுஸ்திரேலியாவில் கடும் மழை – காட்டுத் தீ பிரச்சினைக்கு முடிவு

உடனடி போர் நிறுத்தம் – தாய்லாந்தும், கம்போடியாவும் இணக்கம் – மலேசிய பிரதமர் அறிவிப்பு

editor

சிரிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!