பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விருப்பத்தை ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமைனி நிராகரித்துள்ளார்.
அத்தோடு ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதையும் அவர் மறுத்துள்ளார்.
ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு சக்தி திட்டங்கள் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியன ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தடைப்பட்டது.
கடந்த வாரம், காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் ஆரம்பமானது. இப்போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணமாக இருந்த ட்ரம்புக்கு, இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பாராட்டு விழா இடம்பெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற ட்ரம்ப் பேசுகையில், ‘ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்’ என்றார்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரான் ஆன்மீகத் தலைவர், ட்ரம்பின் புதிய பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை நிராகரித்துள்ளார்.
-ரொய்ட்டர்ஸ்