உள்நாடு

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளில் மாற்றம் – ஹர்ஷன ருக்ஷான்.

(UTV | கொழும்பு) –

மின்கட்டண அதிகர்ப்பைத் தொடர்ந்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை திருத்துவது குறித்து பரிசீலிக்க உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் தமது உற்பத்திகளின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், கலந்துரையாடலுக்கு பிறகு, விலை திருத்தம் செய்யும் முறை அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மின்சார கட்டணத்தை 18 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும் என்பதுடன், இது இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின் கட்டணத் திருத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

BREAKING NEWS = பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் !

மேலும் 281 பேர் நோயில் இருந்து மீண்டனர்

வாகன சேவைக் கட்டணமும் அதிகரிப்பு