சூடான செய்திகள் 1

பெலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு விளக்கமறியல்

(UTV NEWS | COLOMBO ) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை நாளை(03) வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (02)  உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு, சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

150 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றல்

இரவு சந்தை காரணமாக வாகன நெரிசல்…

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு