அரசியல்உள்நாடு

பெரும் தியாகங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாங்கள் அதனை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை! – திசைகாட்டி எம்பி!

நாட்டின் அதிகாரமும் பிராந்திய அதிகாரமும் பெரும் தியாகங்களைச் செய்தே தங்களால் பெறப்பட்டதாகவும், தாம் கைப்பற்றிய அதிகாரத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்க்ஷ்மன் நிபுணராச்சி கூறுகிறார்.

கெஸ்பேவ நகர சபைத் தலைவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, அவர் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்.

‘இன்று நாங்கள் கெஸ்பேவ நகர சபையின் கடமைகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டோம்.

நாட்டின் அதிகாரத்தையும் பிராந்திய அதிகாரத்தையும் பெரும் தியாகங்களுடன் நாங்கள் கைப்பற்றினோம். கைப்பற்றப்பட்ட அந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

ஏனென்றால் நாங்கள் அந்த அதிகாரத்தை எங்களுக்காக அல்ல, நாட்டு மக்களுக்காகக் கைப்பற்றியுள்ளோம் என்றார்.

Related posts

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்

editor

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம்

தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் ரணில் காட்டிக் கொடுக்கின்றார் – விமல் வீரவன்ச