பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து ஹட்டன் நகரில் இன்று காலை (30) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
சில அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் சொந்த நலனுக்காக பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிக்கைகளை போராட்டக்காரர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து பங்களிப்பதாகவும், கொவிட் தொற்று நோய்களின் போதும் நாட்டிற்காக டொலர்களை சம்பாதிக்க கடுமையாக உழைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் சாதாரணமாக கருதப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
-சதீஸ்குமார்

