சூடான செய்திகள் 1

பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் இன்றும்(10)

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

வேதன உயர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்வரை தங்களது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் நேற்று கொட்டகலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, வேதன உயர்வு தொடர்பான விடயத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இன்றைய தினம் வேதன உயர்வு விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ள அவர், இந்த கலந்துரையாடலின் பிரகாரம் தமது எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் பாசறை-(படங்கள்)

கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம்

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்