வணிகம்

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் நொச்சியாகம ஜயகம நீர்விநியோக செயற்றிட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாசிப்பயறு, கௌபி போன்ற ஏனைய தானியங்களை இறக்குமதி செய்வதற்கும் எதிர்காலத்தில் வரையறை விதிக்கப்படும் என்றும் விவசாய கிராம பொருளாதார அலுவல்கள் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்…

Health Life Clinic நவீன வசதிகளுடன் கொழும்பு 7இல் உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

திரி-உதான கடன் திட்டம்