பதுளை பொலிஸ் DCDB யில் பணிபுரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 4.2 கிராம் ஹெரோயின் வைத்திருந்தபோது அம்பகஸ்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை பதுளை தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (26) பதுளை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணை நடவடிக்கையின் போது 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விசேட பொலிஸ் நடவடிக்கையானது பதுளை நகரின் 9 இடங்களை உள்ளடக்கியதாக சுமார் 3 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.
ஏனைய 118 பேர், சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி சான்றிதழ் மற்றும் வருமான அனுமதிப்பத்திரம் இல்லாமை, அத்துடன் வாகனங்களுக்கு சட்டவிரோதமான முறையில் அலங்கார உதிரிபாகங்களைப் பொருத்தியமை போன்ற பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
