உள்நாடு

பெண்ணொருவர் மீது எசிட் வீச்சு – சந்தேகநபரை வலைவீசித் தேடும் பொலிஸார்!

மாவத்தகம பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது திராவகம் (Acid) வீசி காயப்படுத்திய நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இக்குற்றம் தொடர்பில் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதுடன், குற்றத்தை இழைத்த சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 10 ஆம் திகதி இந்த திராவகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே இரத்தினபுரி மற்றும் கலவானை நீதவான் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேடப்படும் சந்தேகநபரின் விபரங்கள்:

பெயர்: அபேசிங்க தொன் மங்கள புஷ்பகுமார அபேசிங்க

முகவரி: வேத்தாகல வடக்கு, வேத்தாகல, கலவானை

தேசிய அடையாள அட்டை இல: 810532394V

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்:

நிலையப் பொறுப்பதிகாரி, மாவத்தகம பொலிஸ் நிலையம் – 0718 591 258

மாவத்தகம பொலிஸ் நிலையம் – 0372 299 222

Related posts

அலுவலக நேரம் தொடர்பிலான அறிக்கை இன்று கையளிக்கப்படும்

நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின் விநியோகத் தடை

தலதா அத்துகோரள சஜித்துக்கு முதுகில் குத்தியுள்ளார் – முஜிபுர் ரஹ்மான்

editor