தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதொரு நிகழ்வு அல்லவென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி உலகப் பெண் மாளிகையில் நடைபெற்ற ‘World Woman Davos Agenda 2026’ நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அது பாலின அடிப்படையில் உருவாக்கப்பட்ட அதிகாரப் படிநிலைகளின் விளைவாகும்.
பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, நிறுவன மற்றும் அதிகாரப் பகிர்வு கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
