அரசியல்உள்நாடு

பெண்கள் முன்னேறுவதற்கான வழிகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பெண்களை போற்றும் அதேவேளை, அவர்கள் முன்நோக்கி செல்வதற்கும், முன்னேறுவதற்கும் இடமளிக்க வேண்டும் எனவும் அதற்குரிய வழிகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் எனவும் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்

அந்தவகையில் வடக்கு மாகாண மகளின் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாக பங்கேற்று இருந்தார்.

இந்நிகழ்வின் போது தையல் இயந்திரங்கள், தற்காலிக கடைத் தொகுதிகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள், கால்நடை வளர்ப்புக்கான உதவித் தொகைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் கலந்துக் கொண்டார்.

Related posts

நீதவான் தம்மிக ஹேமபால கொழும்பு குற்றவியல் பிரிவில் வாக்குமூலம்

மீண்டும் செயலிழந்தது ‘களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்’

கடற்பரப்புகளில் 50 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று