கிசு கிசு

பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை…

(UTV|COLOMBO) உலகிலேயே பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை விளங்குகிறதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் 77ஆம் ஆண்டு முதலீட்டு அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்தப் போது, முதலில் ஆடைத்தொழிற்சாலை​யே திறக்கப்பட்டது. இதற்கு தையல் கடை என்று கூறியதாய் எனக்கு நினைவிலுள்ளது. சிலர் கூறினர் பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகளை தைப்போம் என்றனர். எனவே பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகள் இலங்கையிலேயே தைக்கப்படுகின்றன. விக்டோரியா சீக்ரெட்டிடம் கேளுங்கள் எங்கேயிருந்து உள்ளாடைகள் வருகின்றன என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

சூரியன் மறையாத அதிசய தீவு

பொப் பாடகரின் பாடல்களின் ஒலிபரப்பை நிறுத்திய பிரபல ரேடியோ

குக் இனது கனவு அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள் இவர்களா?