தங்க நகைகளைத் கொள்ளையிட்டு, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மொரட்டுவை, ராவதவத்த டி சொய்சா வீதி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவையைச் சேர்ந்த முத்துவா என்ற பெயரில் அழைக்கப்படும் சந்தேக நபர், மொரட்டுவை, கொட்டாவ, பிலியந்தலை, எகொடஉயன மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளில் பெண்களிடமிருந்து தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் நபர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவரிடம் 7,500 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
கடந்த வருடம், மொரட்டுவையில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் நகை வாங்கச் செல்வதாகக் கூறி நுழைந்து சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.
மேலும் மொரட்டுவ மற்றும் எகொடஉயன பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றில் சென்று இந்தச் சந்தேக நபர் பெண்களின் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
