உள்நாடு

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்

Related posts

அருட்தந்தை சிறில் காமினி CID முன்னிலையில்

“ஜனாதிபதித் தேர்தலே முதலில்” அமைச்சரைவில் தெளிவாக அறிவித்த ரணில்

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டி

editor