உள்நாடு

பெக்கோ சமனின் நெருங்கிய கூட்டாளிக்கு விளக்கமறியல்

மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவால் நேற்று (13) T-81 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் நெருங்கிய கூட்டாளி, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெக்கோ சமனின் துப்பாக்கியை கொண்டு சென்றமை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் எம்பிலிபிட்டிய – கங்கேயாய பகுதியில் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் எம்பிலிபிட்டிய – கங்கேயாய பகுதியைச் சேர்ந்த அமில என்ற ஹெட்டி லியனகே லக்ஷன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து T-81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், 2 மெகசின்கள் மற்றும் இராணுவ சீருடை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]

நாடளாவிய ரீதியில் உள்ள சிறை கைதிகளை பார்வையிட தடை

‘ரிஷாதின் கைது திட்டமிட்ட அடிப்படையிலானது’ என பொறுப்புடன் கூறுவதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு